காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் 
உலகம்

ஹமாஸ் தாக்குதல்: முறியடிக்கத் தவறியதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு முகமை பொறுப்பேற்பு

ஹமாஸ் படையினர் தாக்குதலை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிக்கத் தவறியதற்கு இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமையின் (ஐஎஸ்ஏ) தலைவர் ரோனென் பார் பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

PTI

ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிக்கத் தவறியதற்கு இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமையின் (ஐஎஸ்ஏ) தலைவர் ரோனென் பார் பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஹமாஸ் படையினரின் திடீர் தாக்குதலில், இஸ்ரேலில் 1,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.  ஹமாஸின் கொடூரமான தாக்குதலை முறியடிக்கத் தவறியதற்கு அவர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், இஸ்ரேல் - காஸா போரில் தீர்க்கமான வெற்றிக்காக இறுதிவரை போராடுவதாக உறுதியளித்திருக்கிறார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய எதிர்பாராத தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை மீது கடும் விமரிசனங்கள் எழுந்த நிலையில், அதன் தலைவர் ரோனென் பார் முதல் முறையான விளக்கம் அளித்துள்ளார்.

நாங்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக, கடந்த சனிக்கிழமை, தாக்குதலை முறியடிக்கப் போதுமான முன் எச்சரிக்கையை எங்களால் உருவாக்க முடியவில்லை.

அமைப்பின் தலைவராக இருப்பவர் என்ற முறையில், இதற்கான பொறுப்பு என்னுடையது" என்று ரோனென் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT