மருத்துவர் யூசுப் அல் அகாத் 
உலகம்

இந்தக் குழந்தைகளைக் கொன்றது யார்?: மருத்துவரின் உருக்கமான விடியோ!

காஸாவில் தொடர்ந்து வரும் தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் அதிகம் உயிரழக்கின்றனர்.

DIN

காஸா ஐரோப்பிய மருத்துவமனையின் மருத்துவர் யூசுப் அல்-அகாத் பேசிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில் மருத்துவர் முன்னிருக்கும் படுக்கையில் ஆறு பிஞ்சு குழந்தைகளின் சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. 

மருத்துவர் யூசுப் அல் அகாத் பேசுகையில், “இந்தக் குழந்தைகளைப் பாருங்கள். யார் இவர்களைக் கொன்றது?”

“சுதந்திர உலகமே, ஒடுக்கப்பட்டு துயறுற்று இருக்கும் இந்த மக்களின் மீது படுகொலை நடத்தப்பட்டபோது எங்கு சென்றாய்?” என உருக்கமாகப் பேசியுள்ளார்.

காண்போரைக் கண் கலங்க வைக்கும் இந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 3,478 எனவும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான நபர்களின் எண்ணிக்கை 69 எனவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT