உலகம்

காஸாவில் மீண்டும் இணைய சேவை: பாலஸ்தீனம்

DIN

காஸாவில் மீண்டும் இணையசேவை படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் மூன்றாவது வாரமாக தொடர்ந்து வருகிறது. காஸா மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. 

தரைவழியாக காஸா எல்லையில் நுழைந்து காஸாவினுள் உள்ள ஹமாஸ் படையினரை அழிக்கவும், காஸா தரப்பரப்புக்கு கீழே பதுங்கு குழிகளுக்குள் தாக்குதல் நடத்தவும் தரை வழித்தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இது போரின் இரண்டாம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே காஸாவில் தடைசெய்யப்பட்டிருந்த இணையசேவை மீண்டும் படிப்படியாக தற்போது வழங்கப்பட்டு வருவதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸாவுக்கான இணைய சேவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே தாக்குதலில் துண்டிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் சரி செய்யப்பட்டதால், இணையசேவை மீண்டும் கிடைப்பதாகவும் படிப்படியாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் எனவும் பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே காஸா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இணையத்தை பயன்படுத்த முடிவதாக பாலஸ்தீன செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை நீரில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

SCROLL FOR NEXT