மேற்குக் கரையில் தாக்கப்பட்ட கடை 
உலகம்

மேற்குக் கரையில் இஸ்ரேலின் தாக்குதல்: 1600 பேர் கைது!

மேற்குக் கரையில் ஹமாஸின் மூத்த தலைவர் வீடுகளைத் தகர்த்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.

DIN

காஸாவில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் ராணுவம் மேற்குக் கரையில் ஹமாஸின் மூத்த தலைவர்கள் உள்பட ஆதரவாளர் வீடுகளைத் தகர்த்து வருகிறது.

போர் ஆரம்பித்த முதல் வாரம் தொடங்கி இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் தொடர் சோதனைகளும் சந்தேகப்படுவோரை கைது செய்வதும் சுட்டுக் கொல்வதுமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸின் மூத்த தலைவரான அரசியல் பிரிவு துணை தலைவர் சலே அல்-அரூரியின் வீடு தகர்க்கப்பட்டிருக்கிறது. அக்.7 தாக்குதலில் அவருக்கு பெரும் பங்கு இருக்கலாம் என நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக தேடலில் இருப்பவருக்கு அமெரிக்கா 2018-ல் அவரைக் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் டாலர் சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் தனது வீட்டில் இல்லை. லெபனானில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஐ.நா.வின் தரவுகளின் படி மேற்குக் கரையில் இதுவரை 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள விடியோவில் இஸ்ரேல் ராணுவம் மேற்குக் கரை பகுதியில் சாலையில் வைத்து ஒரு இளைஞரைச் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. 

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு எதிராக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். “போர் நிறுத்தத்திற்கான அழைப்பு என்பது இஸ்ரேலை ஹமாஸிடமும் பயங்கரவாதத்திடமும் சரணடைய செய்வதற்கான அழைப்பு. அது நடக்காது. போரில் வெல்லும் வரை போராடுவோம்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT