உலகம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் மேற்கு கிறிஸ்சர்ச்சில் நகரிலிருந்து 124 கி.மீ தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக இருந்ததாகவும், பின்னர் 6.2 அளவில் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கட்டடங்கள் அதிர்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். 11 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT