6 ரஷிய விமானங்கள் அழிப்பு
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:15 PM
ரஷியாவின் 6 போா் விமானங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது.
எல்லைப் பிராந்தியமான ரோஸ்தொவில் அமைந்துள்ள மொரொஸோவ்ஸ்க் விமானதளத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் மேலும் 8 விமானங்கள் கணிசமாக சேதமடைந்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தாக்குதலில் ரஷியப் படையினா் கொல்லப்பட்டிருப்பதற்கோ, காயமடைந்திருப்பதற்கோ வாய்ப்புள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறினா்.
மொரொஸோவ்ஸ்க் விமானதளத்தில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்படும் எஸ்யு-27 மற்றும் எஸ்யு-34 ரக விமானங்களை ரஷியா நிறுத்திவைத்துள்ளது.
Advertisement
எனினும், விமானங்கள் அழிக்கப்பட்ட தகவலை ரஷியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், ரோஸ்தொவ் பிராந்தியத்தைக் குறிவைத்து 40 ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக மட்டும் அந்த நாடு கூறியது.