உலகம்

”டெய்லர் ஸ்விப்டுக்கு எப்படி வேண்டுமோ அதுபோல..” : ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் டெய்லர் ஸ்விப்ட் உடன் இசையமைக்க ஆர்வம்

DIN

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் உடன் இணைந்து பணியாற்றும் விருப்பத்தை ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ‘அமர் சிங்க் சம்கிலா’ படத்தில் இசையமைத்துள்ள ரஹ்மான் அதுதொடர்பாக கனெக்ட் எப்எம் கனடாவுக்கு அளித்த பேட்டியில், ’டெய்லர் ஸ்விப்ட் உடன் பணியாற்றுவது என்றால் எந்த மாதிரியான இசை என்பது முக்கியமில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ரஹ்மான், “அவருக்கு (டெய்லர்) எப்படி வேண்டுமோ, நடனம் சார்ந்த இசை வேண்டுமானால் அது போல. ரோமாண்டிக் இசை வேண்டுமானால் அது போல (இசை அமைக்கலாம்). எப்படியும் டெய்லர்தான் பாடல் எழுதப் போகிறார்”

மேலும், ”இசையின் ஆற்றலை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால் அது சிறந்தது. மைக்கேல் ஜாக்சன் அதைதான் செய்தார். அவர் தொண்டு பணிகளுக்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். ஆப்பிரிக்காவில் சமூக பணிகள் மேற்கொண்டார். டெய்லர் ஸ்விப்ட் அந்த நிலையை அடைவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர் நிறைய கடந்து வந்திருக்கிறார். ஏமாற்றப்பட்டிருக்கிறார், அதிலிருந்து மீண்டிருக்கிறார். இசையமைப்பாளர்களுக்கான இன்ஸ்பிரேஷன்- டெய்லர் ஸ்விப்ட்” என தெரிவித்துள்ளார்.

இசைப் பாடல்களின் வருவாய் மூலமாகவே பில்லினியரான டெய்லர் ஸ்விப்ட்டின் புதிய ஆல்பம் 'டார்ச்சர்ட் பொயட்ஸ் டிப்பார்ட்மெண்ட்’ - ஏப்ரல் 19 வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

SCROLL FOR NEXT