கிம் ஜாங் உன் மற்றும் புதின் (கோப்புப் படம்) 
உலகம்

வடகொரியா வெள்ள பாதிப்பு: ஆதரவுக் கரம் நீட்டும் புதின்!

வடகொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த ரஷிய அதிபர் புதின் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

DIN

வடகொரியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ள பாதிப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷிய அதிபர் புதின், தாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம் என ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

வடகொரியாவில் கடந்த வாரம் ஜூலை 27 அன்று பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி, அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வடக்கே உள்ள சீன எல்லைப் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த பேரிடர் தொடர்பாக இரங்கல் தெரிவித்த ரஷிய அதிபர் புதின், “புயல் ஏற்படுத்திய பாதிப்பால் தங்கள் அன்பானவர்களை இழந்த அனைவருக்கும் எங்கள் அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்களின் உதவியும் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு உண்டு” என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - க்கு டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் கிம் ஜாங் உன்

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு வட கொரியாவின் உருவான பிறகு, வட கொரியா மற்றும் ரஷ்யா நட்பு நாடுகளாக இருந்து வருகின்றனர். பின்னர், 2022ல் உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பால் மேலும் நெருக்கமாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்கொரியா உடனடியாக ஆதரவு வழங்குவதாகவும் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கும் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தன் மீது அவதூறு பரப்பி, களங்கம் ஏற்படுத்த இந்தச் செய்திகள் பரப்பப்படுவதாக கிம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட நாடான வடகொரியாவில் அதன் பலவீனமான கட்டுமானங்களால் இயற்கைப் பேரழிவுகள் மூலம் பேரழிவுகள் ஏற்படுவதாகவும், பெரும்பாலான காடுகளை அழித்ததால் வெள்ள பாதிப்பு மிகவும் அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT