படம் | ஏபி
உலகம்

தேர்தல் நேரத்தில் கோல்ஃப் அவசியமா? அதிருப்தியில் டிரம்ப் ஆதரவாளர்கள்

தேர்தல் நேரத்தில் கோல்ஃப் அவசியமா? அதிருப்தியில் டிரம்ப் ஆதரவாளர்கள்

இணையதளச் செய்திப் பிரிவு

உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபடாமல் கோல்ஃப் விளையாடுவதிலும், எதிரணி வேட்பாளர் கமலா ஹாரிஸை வசைபாடுவதிலும் கவனம் செலுத்தி வரும் டொனால்டு டிரம்ப்பின் நடவடிக்கைகள், அவர் சார்ந்த குடியரசுக் கட்சியினரிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

அமெரிக்க துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரத்தில் முனைப்பு காட்டும் அளவுக்கு, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் மீது அக்கறை கொள்ளவில்லை என்பதை அவரது செயல்பாடுகள் வெளிக்காட்டுகின்றன.

ஆகஸ்ட் தொடக்கத்தில் கமலா ஹாரிஸை விட கருத்துகணிப்புகளில் முன்னிலை பெற்றிருந்த டிரம்ப், தற்போதைய நிலவரப்படி கமலா ஹாரிஸைவிட பின்தங்கியுள்ளார். கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.

ஜனநாயகக் கட்சியில், அமெரிக்காவின் இந்நாள் அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடனைவிட டிரம்புக்கு கடும் போட்டியாளாராக உருவெடுத்துள்ளார் கமலா ஹாரிஸ்.

இந்த நிலையில், டிரம்ப் கமலா ஹாரிஸ் மீது வார்தைப்போர் உரைத்து வருகிறார். கோல்ஃப் விளையாடுவதும், கமலா ஹாரிஸ் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பிரசாரத்தின் வேகத்தை முடக்குவதாகவும், இதன் காரணமாக, தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு தங்கள் பக்கத்திலிருந்து நழுவி வருவதாகவும் குடியரசு கட்சியினரிடையே கவலை சூழ்ந்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் கையில் பீஸ்ஸா உடன் டிரம்ப்

கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்து வரும் டிரம்ப், ‘வரலாற்றில் மோசமான தலைமைகளில் ஒன்றாக ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் இருந்து வருவதாகவும், கமலா ஹாரிஸ் மிக மோசமான துணை அதிபர் என்பதில் சந்தேகமில்லை’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸின் தலைமையில் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிடும். கமலா ஹாரிஸ், அணு ஆயுத மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்வார் எனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் டிரம்ப்.

டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களுக்கு இது சவாலான காலகட்டமாகவே உள்ளது. எதிரணியில், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் உடன் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்க ஆதரவு திரட்டிக் கொண்டிருக்க, தங்கள் அணியில், டிரம்ப்புடன் துணை அதிபர் வேட்பாளராக களமிறங்கும் வேன்ஸ், இவர்கள் இருவரையும் ஒருசேர காண்பது அரிதாகி வருவதைப் பின்னடைவாக பார்க்கின்றனர் குடியரசுக் கட்சியினர்.

ஜனநாயகக் கட்சியின் தேசிய அளவிலான மாநாட்டில் கமலா ஹாரிஸின் உரையை பார்த்தவர்கள் எண்ணிக்கை 26.2 மில்லியனை கடந்துள்ளதாகவும், எதிரணி வேட்பாளர் டிரம்ப்பின் உரையை 25.3 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகவும் நீல்சென் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

கமலா ஹாரிஸ் அளவுக்கு கடுமையாக உழைப்பதில்லை என்ற செய்திகள் வெளியாகியிருப்பதைக் கண்டு டிரம்ப் எரிச்சலடைந்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, அவரது நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையில் அவருடன் நெருக்கமாக பணியாற்றிய ஒருவர் கூறியதாவது, “முன்னாள் அதிபர் திசை மாறிச் சென்றுவிட்டார் எனக் குறிப்பிட்டுப் பேசியிருப்பதும், இதே கருத்தை டிரம்ப்பின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் அலீஸா ஃபாரா கிரிஃப்பினும் தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT