கோப்புப் படம். 
உலகம்

போர்த்துகல்: ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பலி, ஒருவர் மாயம்

போர்த்துகல்லில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் பலியானார்கள்.

DIN

போர்த்துகல்லில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் பலியானார்கள்.

வடக்கு போர்ச்சுகலில் உள்ள சமோடஸ் பகுதியில் தீயணைப்பு நடவடிக்கைக்கு பிறகு வெள்ளிக்கிழமை திரும்பிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஒரு பைலட் மற்றும் ஐந்து வீரர்களுடன் சென்ற அந்த ஹெலிகாப்டர் டூரோ ஆற்றில் திடீரென விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 வீரர்கள் பலியானார்கள்.

ஹெலிகாப்டரின் விமானி அவ்வழியாகச் சென்ற படகு மூலம் விமானி மீட்கப்பட்டார். உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹெலிகாப்டர் விபத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே போர்ச்சுகல் அதிபர் தனது திட்ட பயணங்களை ரத்து செய்துவிட்டு, விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

சாதகமான பலன் இன்று யாருக்கு? தினப்பலன்கள்!

டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT