PTI
உலகம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு! -பிரிட்டன் எச்சரிக்கை

வங்கதேசத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சாராதோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு -பிரிட்டன் எச்சரிக்கை

DIN

வங்கதேசத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சாராதோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரிட்டன் எச்சரித்துள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான, அதிலும் குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அண்மை காலங்களில் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ், தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹிந்து பெண் பத்திரிகையாளாரான முன்னி ஸாஹா மீது கடந்த சனிக்கிழிமை இரவு, மத அடிப்படைவாத கும்பலைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தியிருப்பதும், தகவலறிந்து அதே நேரத்தில் அங்கு வந்த காவல் துறையினா், அந்த கும்பல் கூறிய குற்றச்சாட்டின்பேரில் முன்னி ஸாஹாவை கைது செய்த சம்பவமும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. எனினும், கைது செய்யப்பட்ட முன்னி ஸாஹா அதன் பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.

வங்கதேசம் செல்லும் பிரிட்டன் குடிமக்களுக்கு இது குறித்து பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் தாக்குதல்களை நிகழ்த்த முயற்சி எடுத்து வருவதாகவும், அங்கு வெளிநாட்டவர்கள் செல்லும் இடங்கள், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், அரசியல் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத மக்கள், இஸ்லாமிய மார்க்கத்தைச் சாராதோர், அது சார்ந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்காதோர் வங்கதேசத்தில் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் நவீன வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும்.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க வங்கதேச அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாதுகாப்புப்படைகளின் இருப்பு அதிகரிக்கப்படுவது, பொதுநடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகு விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மக்கள் அதிக எண்ணிக்கையில் திரளும் இடங்களுக்கு இயன்றவரை செல்லாமல் இருக்கவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரிட்டன் அரசு வங்கதேசத்திலுள்ள அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT