Ebrahim Noroozi
உலகம்

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓ(ட்)டிய கார்! 2 பேர் பலி! - என்ன நடந்தது?

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய கார்...

DIN

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் மீது ஒருவர் காரை வேகமாக இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருவர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பெர்லினில் இருந்து தென்மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிழக்கு நகரமான மாக்டேபர்க்கில் உள்ள சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொருள்கள் வாங்க மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு வேகமாக வந்த கருப்பு பிஎம்டபிள்யூ கார், மக்கள் மீது சரமாரியாக மோதிச் சென்றது.

கார் நிலைதடுமாறி ஓடியதாகக் கருதப்பட்ட நிலையில் அதனை ஓட்டிய நபர் வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது.

இதில் ஒரு குழந்தை உள்பட இருவர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் சந்தையில் குறைந்தது 400 மீட்டர்கள் வாகனம் சென்றதாகவும் அந்த பகுதி முழுவதும் ரத்தக்கறையுடன் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ் மரங்கள், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தை பின்னர் மிகவும் கோரமாக காட்சியளித்ததாக புகைப்பட செய்தியாளர் கூறுகிறார்.

உடனடியாக அங்கு 100 போலீசார், மருத்துவர்கள் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சென்று மக்களை மீட்டுள்ளனர். சில மணி நேரங்கள் அப்பகுதியில் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது.

யார் அந்த தலேப்?

இந்த விபத்தில் தொடர்புடைய சௌதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதான மருத்துவர் தலேப் என்பவரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்தான் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

கிழக்கு மாநிலமான சாக்சோனி-அன்ஹால்ட்டில் 2006 ஆம் ஆண்டு முதல் வசிக்கிறார். 2016 ஆம் ஆண்டு அகதி உரிமையைப் பெற்றுள்ளார். இவர் உளவியல் சிகிச்சை நிபுணர்.

அவர் தனியாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கு பின்னால் ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். அவர் பயன்படுத்திய கார் வாடகைக்கு எடுத்தது என்பதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT