உலகம்

ஹோண்டாவுடன் இணைகிறது நிஸ்ஸான்!

ஹோண்டாவுடன் இணைகிறது நிஸ்ஸான் - புதிய அறிவிப்பு!

DIN

டோக்கியோ: கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஹோண்டாவுடன் நிஸ்சான் நிறுவனம் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(டிச. 23) கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பான முறையான ஒப்பந்தம் ஜூன் மாதம் ஏற்படுமென்றும், 2026-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவத்தில் கையெழுத்தாகும் என்றும் ஹோண்டா நிறுவன தலைவர் டோஷிஹிரோ மிபே தெரிவித்துள்ளார்.

ஜப்பானை சேர்ந்த இவ்விரு நிறுவனங்களும் இணைவதன் மூலம், உலகளவில் ஆட்டோமொபைல் விற்பனையில் 3-ஆவது பெரிய நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மிட்சுபிஷி நிருவனமும் இவர்களுடன் இணைய முனைப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குரித்த பேச்சுவார்த்தையில் மேற்கண்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

நிஸ்ஸான் நிறுவனத்துடன் கைகோர்ப்பதால், பெரிய அளவிலான எஸ்யூவி ரக கார்களுக்கு டிரக் அளவிலான வாகன வடிவமைப்பை பயன்படுத்தும் நிஸ்ஸான். இப்போது அத்தகைய ‘பாடி-ஆன்-ஃப்ரேம்’ வடிவமைப்பை ஹோண்டா நிறுவனத்துக்கு வழங்கும். அதேபோல, பேட்டரிகள் மற்றும் மின்சார கார்கள் வடிவமைப்பில் அனுபவம் வாய்ந்த நிஸ்ஸான் நிறுவனத்திடமிருந்து ஹோண்டா தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு பலன்களைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT