உலகம்

விவாகரத்துதான் தீர்வு? -சிரியா முன்னாள் அதிபரின் மனைவி

இவர்கள் இருவருக்கும் கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

DIN

சிரியாவைவிட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் அதிபரின் மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.

சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத், ரஷிய நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். விவாகரத்து கிடைத்தபின் அவர் மாஸ்கோவிலிருந்து லண்டனுக்கு குடிபெயரவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் சிரியா மட்டுமல்லாது பிரிட்டன் குடியுரிமையையும் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது பெற்றோர் லண்டனில் வசித்து வந்த நிலையில், இவர் தனது இளமைப் பருவத்தை லண்டனில் கழித்தவர். அங்கு அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, லண்டனில் கல்வி பயில வந்த பஷார் அல் அசாத்துடன் காதல் வசப்பட்ட இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு தனது 25-ஆம் வயதில் பஷார் அல் அசாத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வாரிசுகள் உள்ளனர்.

இந்த நிலையில், மாஸ்கோவில் தன்னால் வாழப் பிடிக்கவில்லை என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், கடந்த மே மாதம் ரத்த தட்டணுக்கள் உறைதல் பிரச்சினைக்காகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது சிறு வயது பருவத்தை லண்டனில் கழித்த அவர், மீண்டும் அங்கே செல்ல இப்போது ஆயத்தமாகி வருகிறார்.

இன்னொருபுறம், இந்த தகவலை முற்றிலும் நிராகரித்துள்ளது ரஷிய அரசு. அந்நாட்டின் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், “அப்படியெதுவுமில்லை, இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை” எனத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடந்தவை: கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து நீண்ட காலமாகவே உள்நாட்டுச் சண்டை தேக்கமடைந்திருந்தது.

இந்த நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக கிளா்ச்சிப் படையினா் கடந்த மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை அவா்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நின்ற லாரி மீது காா் மோதல் நிதிநிறுவன அதிபா் உயிரிழப்பு

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

காலணி விற்பனையகத்தில் ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT