உலகம்

காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

Din

காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காஸாவில் முற்றுகையிடப்பட்டுள்ள ஜபாலிலா அகதிகள் முகாம் பகுதியில் அமைந்துள்ள அல்-அத்வா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

மேலும், பேய்ட் லஹியா நகரில் அமைந்துள்ள கமால் அத்வான் மருத்துவமனையில் தொலைதூரத்திலிருந்து ரிமோட் மூலம் இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது (படம்). இதில் 20 நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் காயமடைந்தனா்.

அதே நகரிலுள்ள இந்தோனேசியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை இஸ்ரேல் படையினா் வலுக்கட்டாயமாக வெளியேற்றினா் என்று அதிகாரிகள் கூறினா்.

45,338 போ் உயிரிழப்பு: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,338-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸாவில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 போ் உயிரிழந்தனா். இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,338-ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,07,764 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT