மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹாண் பகுதி நெடுஞ்சாலைகளில் பனி தேங்கியுள்ளதால் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | படம்: ஏபி 
உலகம்

சீனாவில் பனிப்பொழிவால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் சாலைகளில் படர்ந்துள்ள பனியின் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

பீஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் சாலைகளில் படர்ந்துள்ள பனியின் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹாண் பகுதி நெடுஞ்சாலைகளில் பனி தேங்கியதால், திங்கள்கிழமை இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை காண முடிந்தது. 

சுமார் 4000 வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.இதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை போக்குவரத்து சீராகும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய சீனாவில் இதுவரை இல்லாத அளவாக ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு புதன்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் சனிக்கிழமையன்று லூனார் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக இரவு நேரங்களில் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காகவும், சொந்த ஊர்களுக்கும் வாகனங்களில் படையெடுத்ததால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT