வலைதளத்தில் பரவிவரும் புகைப்படம் | Instagrampubity 
உலகம்

கோமாவிலிருந்து மீளவைத்த நகைச்சுவை!

அமெரிக்காவில் 5 வருடமாகக் கோமாவிலிருந்த பெண் ஒருவர் நகைச்சுவை ஒன்றுக்கு சிரித்து குணமாக ஆரம்பித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

DIN

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த ஜென்னிஃபர் எனும் பெண் கடந்த 2017 செப்டம்பரில் சாலை விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு கோமா நிலையை அடைந்தார். ஐந்து வருடங்கள் கோமாவிலிருந்த பெண், தன் தாய் சொன்ன நகைச்சுவைக்கு சிரித்து கோமாவிலிருந்து வெளியில் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கோமாவிலிருந்து மெதுவாக மீண்டுவரும் ஜென்னிஃபர் தனது மகனின் விளையாட்டுப் போட்டியில் பார்வையாளராகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

ஜென்னிஃபரின் தாய் பெக்கி மீன்ஸ், கோமாவிலிருந்த தன் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மெதுவாகச் சிரித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் நாளுக்கு நாள் மெதுவாக அவர் குணமடைய ஆரம்பித்துள்ளது அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

இன்னும் முழுதாக குணமடைந்திடாத ஜென்னிஃபர் பேசுவதற்கும், உடல் அசைவுகளுக்கும் தொடர்ந்து பயிற்சி பெற்று முன்னேற்றம் கண்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வு தொடர்பான வலைதளப்பதிவு பிரபலமான நிலையில், 'அது என்ன ஜோக்' எனப் பலர் கமெண்ட் செய்துவருகிறார்கள். உண்மையில் சிரிப்பே மருந்து எனப் புரிய வைத்த இந்த நிகழ்வு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்ணிலவே... வெண்ணிலவே... கஜோல்!

நீயாக இரு... ஐஸ்வர்யா ராஜேஷ்!

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

SCROLL FOR NEXT