கஞ்சா இலை (மாதிரி படம்) Pixabay
உலகம்

ஜெர்மனியில் சட்டபூர்வமாகும் கஞ்சா?

ஜெர்மனியில் கஞ்சா சட்டபூர்வமாக்கல்: புதிய விதிகளும் விளைவுகளும்

DIN

ஜெர்மனி பாராளுமன்றம், கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மால்டா, லக்ஸம்பெர்க் நாடுகளுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனில் கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்கவுள்ள மூன்றாவது நாடு ஜெர்மனி.

புதிய சட்டத்தின்படி, ஜெர்மனியில் தனிநபர் பொதுவெளியில் 25 கிராம் அளவுக்கும் வீட்டில் 50 கிராம் அளவுக்கும் கஞ்சாவை வைத்துக் கொள்ளவும் வீடுகளில் மூன்று செடிகள் வரை வளர்க்கவும் அனுமதிக்கப்படவுள்ளது.

கார்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜெர்மனிய சுகாதார துறை அமைச்சர் கார்ல் லாட்டர்பாக், இந்த சட்டம் 70 லட்சம் ஜெர்மானியர்கள் தொடர்ச்சியாக எடுத்து கொள்ளும் கஞ்சாவை வெளிப்படையான சந்தைக்கு கொண்டுவரும் எனத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காகவும் மேம்பட்ட தரத்தில் கஞ்சா சந்தைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கஞ்சா பயன்பாட்டுக்குத் தடை நிலவும். 18 முதல் 21 வயதிற்குள் உள்ளவர்கள் அதிகபட்சம் 30 கிராம் அளவில் மட்டுமே கஞ்சாவை வாங்க இயலும்.

ஏப்ரல் 1 முதல் கஞ்சாவை வைத்துக் கொள்ளவும் வளர்க்கவும் அனுமதி அமலாகவுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு உரிமம் பெற்ற லாப நோக்கமற்ற அமைப்புகள் மூலம் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு பகிர அனுமதிக்கப்படும்.

ஜெர்மனியின் 16 மாநிலங்களில் சட்ட பொறுப்பில் உள்ள எதிர்க்கட்சி மற்றும் மருத்துவர்கள் குழு அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய கோரி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT