உலகம்

ஜப்பானில் பயணிகள் விமானம் விபத்து: தீப்பிடித்து எரிந்தது!

ஜப்பானில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜப்பானில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷின் சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து 300 பயணிகளுடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் 516 என்ற விமானம் டோக்கியோவின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

டோக்கியோவில் இந்த விமானம் தரையிறங்கிய போது கடற்படையின் விமானத்தின் மீது மோதியதில் தீப்பற்றி பயங்கரமாக எரிந்துள்ளது. ஓடுதளத்தில் நீண்ட தூரம் சென்ற பிறகே விமானம் நின்றுள்ளது.

உடனடியாக விமான நிலையத்தின் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் படையினரும் விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜப்பான் கடற்படையின் எம்ஏ-722 என்ற சிறிய ரக விமானம் மோதியிருக்கக்கூடும் என்ற முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்துக்குள்ளான விமானத்தில் 367 பயணிகள் இருந்ததை ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

மிகவும் பரபரப்பாக காணப்படும் ஜப்பானின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தந்திருக்கும் சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT