japana_0601chn_1 
உலகம்

ஜப்பான் நிலநடுக்க உயிரிழப்பு 200ஐ தாண்டியது!

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. 

DIN

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. 

நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 

இந்த நிலையில், புதன்கிழமை நிலவரப்படி நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, 611 போ் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 210 போ் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..? பி.விஸ்வநாதன், செயலர், அகில இந்திய காங்கிரஸ்.

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

"குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

SCROLL FOR NEXT