அமைச்சரவை கூட்டத்தில் கேப்ரியல் அட்டல் | AP 
உலகம்

'செயல்..செயல்..செயல்’: புதிய பிரான்ஸ் பிரதமரின் லட்சியம்

பிரான்ஸில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கேப்ரியல் தலைமையிலான அமைச்சரவையில் 14 அமைச்சர்கள் கூடியுள்ளனர்.

DIN

பிரான்ஸில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதம அமைச்சரின் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது.

கூட்டத்தில் தனது ஒற்றைக் குறிகோளாக அவர் முன்வைத்துள்ளது ‘செயல், செயல், செயல்’ என அதிபரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

கேப்ரியல் அட்டல், 34 வயதான இவர், பிரான்ஸ் வரலாற்றிலேயே மிக இளைய பிரதமர் மற்றும் வெளிப்படையாக தன்பாலின ஈர்ப்பாளராக அறிவித்துக் கொண்ட முதல் பிரதமர்.

கேப்ரியல் தலைமையிலான அமைச்சரவையில் 14 அமைச்சர்கள் கூடியுள்ளனர். புதிய அரசு இன்னும் 10 நாட்களில் கூடுதல் இணை அமைச்சர்களுடன் பொறுப்பேற்கவுள்ளது.

வழக்கமாக 30 முதல் 40 அமைச்சர்கள் பிரான்ஸ் அவையில் இடம்பெறுவர். புதிய முகங்களோடு அமைக்கப்பட்ட அமைச்சரவை புத்துணர்வோடு ஏற்கெனவே உள்ள சில அமைச்சர்களுடன் அமைவதாக அதிபர் இமானுவேல் மேக்ரானின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைக் குறித்து அதிபர் மேக்ரான், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ள உரையில் குறிப்பிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அட்டல் தலைமையிலான அமைச்சரவை மிகவும் திறன் வாய்ந்ததாகவும் முடிவுகளை துரிதமாக பெறும்வகையிலும் சிறியதாக அமைந்துள்ளதாக மேக்ரான் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT