இன்வாக்ஸியா செய்யறிவுக் கருவி | Invoxia 
உலகம்

செல்லப்பிராணிகளுக்கு செய்யறிவு தொழில்நுட்பம்!

செல்லப்பிராணிகளுக்கான புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை இன்வாக்சியா (Invoxia) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

DIN

லாஸ் வேகாஸில் நடந்த நுகர்வோர் மின்சாதன கண்காட்சியில் (CES - 2024) செல்லப்பிராணிகளுக்கான புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது இன்வாக்சியா (Invoxia) நிறுவனம்.

நாய் அல்லது பூனைகளுக்கு ஏற்ற வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளின் கழுத்தில் கட்டப்படும் கயிறோடு இந்த கருவியை இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாய் அல்லது பூனையின் கழுத்தில் உள்ள கயிறோடு இணையும் இந்த கருவி, அவற்றின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து, உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கின்றன. அவற்றின் இதயத்துடிப்பில் மாற்றம், அல்லது அவைகளின் இயல்பான செயல்பாட்டில் மாற்றம், அதிக தூரம் சென்றுவிடுதல், பசி, தூக்கம், நடை, ஓட்டம் போன்றவை தொடர்பான தகவல்களை உரிமையாளரின் செல்போனில் உள்ள செயலிக்கு அனுப்புகிறது. 

36 கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த கருவியால், நாய் குரைக்கும் சத்தத்தில் கூட வித்தியாசத்தைக் கண்டறியமுடியும் என இன்வாக்சியா நிறுவனம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்த இதே கருவியை, அதிக முன்னேற்றங்களுடன் இந்த ஆண்டு களமிறக்கியுள்ளது. 

உரிமையாளரின் செல்போனில் இருக்கும் செயலியில் உள்ள செய்யறிவு தொழில்நுட்பம், அவர்களது செல்லப்பிராணி குறிந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இன்வாக்சியாவின் செல்போன் செயலி | Invoxia

நாய்களுக்கான இந்தக் கருவி விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், பூனைக்கான கருவி மார்ச் மாதம் சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை T.Nagar மேம்பாலம்! முதல்வர் M.K.Stalin திறந்துவைத்தார்! | DMK | Flyover | Shorts

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

ருஷ்யக் கதைகள்

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! - சைபர் கிரைம்

மண்டோதரி

SCROLL FOR NEXT