உலகம்

எம்.பி. மீது திருட்டு குற்றச்சாட்டு: மன அழுத்தத்தால் பதவி விலகல்?

DIN

நியூசிலாந்தின் முதல் அகதி பாராளுமன்ற உறுப்பினர் மீது திருட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்தர அலங்கார பொருள்கள் விற்பனையகத்தில் சில முறை அவர் பொருள்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு முன்னர் அவர் தனது பதவியில் இருந்து வேலை நிமித்தமான அழுத்தம் காரணமாக விலகுவதாகவும் அதனால் தனது இயல்பு பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆக்லாந்தில் உள்ள பான்சன்பி என்கிற அழகு பொருள்கள் விற்பனையகத்தில் நியூசிலாந்து பசுமை கட்சியின்  உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ராமன் திருடியதாக புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதி மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான கஹ்ராமன், இஸ்ரேல்- ஹமாஸ் விவகாரத்தில் தொடர்ச்சியாக போர் நிறுத்தத்துக்கான குரல் கொடுத்து வருபவர்.

ஈரானைச் சேர்ந்த கஹ்ராமன், ஆக்ஸ்போர்டில் சட்டம் பயின்றவர். சிறுவயதில் ஈரான்- ஈராக் போரின்போது நியூசிலாந்தில் பெற்றோர்களுடன் புகலிடம் அடைந்தார். 2017-ல் முதல் அகதி பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.

பசுமை கட்சியின் தலைவர் ஜேம்ஸ் ஷா, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் கஹ்ராமன் பாலியல் ரீதியான வன்முறை, உடல் வன்முறை, கொலை மிரட்டல் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT