கோப்புப்படம் 
உலகம்

கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை மீட்க இந்தியா உதவி!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

DIN

கொழும்பு : இலங்கையின்  டிகோவிடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, கடந்த 16-ஆம் தேதி கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள்  சிறைப்பிடிக்கப்பட்டனர். எனினும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை அரசுடன் பேச கடற்கொள்ளையர்கள் அனுமதித்திருப்பதாகவும், மீனவர்களுடன் இலங்கை அரசு தொடர்பிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை மீட்க இந்தியா உதவ முன்வந்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்கிரமசூர்யா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

SCROLL FOR NEXT