ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீனர் மூவர் பலியாகினர்.
ஜெனின் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஐபிஎன் ஷினா மருத்துவமனையில் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததாகவும் ஹமாஸ் பிரிவைச் சேர்ந்த மூவரைச் சுட்டு கொன்றதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையைப் பதுங்குமிடமாக அவர்கள் பயன்படுத்தியதாகவும் அவர்களில் ஒருவர் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன சுகாதார அமைச்சகம், இஸ்ரேல் படைகள் மருத்துவமனையின் சிகிச்சை பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவதை நிறுத்த வலியுறுத்துமாறு பன்னாட்டு அமைப்புகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.
போர் தொடங்கியது முதலே மேற்கு கரை பகுதியில் வன்முறை காணப்படுகிறது. இஸ்ரேல் அங்குள்ள பாலஸ்தீனர்களிடம் விசாரணை நடத்துவதும் சோதனையிடுவதுமாக செயல்பட்டு வருகிறது. அதனால் மோதல் போக்கு நீடிக்கிறது. 380 பாலஸ்தீனர்கள் இதுவரை பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.