சியோலில் ஏற்பட்ட விபத்து 
உலகம்

சியோலில் சாலையை கடக்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்: 9 பேர் பலி!

தலைநகர் சியோலில் சாலையை கடக்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தென்கொரிய தலைநகர் சியோலில் சாலையை கடக்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.

சியோல் நகரின் அருகிலுள்ள சந்திப்பில் நேற்றிரவு 9.27 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. 68 வயதுள்ள நபர் ஓட்டிச்சென்ற கார், மற்றொரு காருடன் மோதி சிக்னலில் காத்திருந்தவர்கள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். நால்வர் காயமடைந்தனர்.

கார் தவறான திசையில் திருப்பியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் மதுபோதையில் இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து அதிபர் யூன் சுக் யோலுக்கு விளக்கமளிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் லீ சாங்-மின் மற்றும் பிற உதவியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT