சீன சுங்கத்துறை வெளியிட்ட படம். 
உலகம்

100-க்கும் மேற்பட்ட பாம்புகளைக் காற்சட்டைக்குள் மறைத்துக் கடத்தியவர் கைது!

சீனாவில் 100-க்கும் மேற்பட்ட பாம்புகளைக் காற்சட்டைக்குள் மறைத்து வைத்துக் கடத்திய நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

சீனாவில் 100-க்கும் மேற்பட்ட உயிருடனிருந்த பாம்புகளைக் காற்சட்டைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கிலிருந்து எல்லை நகரமான ஷென்சென் பகுதிக்கு செல்ல முயன்ற அந்த நபர் டேப் சுற்றப்பட்ட ஆறு பைகளை சீல் செய்து தனது காற்சட்டைக்குள் மறைத்து வைத்திருந்தார். அவரைப் பிடித்து பைகளைத் திறந்து சோதனை செய்தபோது, ஒவ்வொரு பைக்குள்ளும் வெவ்வேறு அளவில், பல வகையான நிறங்களைக் கொண்ட பாம்புகள் உயிருடன் இருந்துள்ளன.

மொத்தம் 104 பாம்புகளை அவர் மறைத்து வைத்துக் கடத்தியதாக சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், பல பாம்புகள் சீன நாட்டிலுள்ள இனத்தைச் சேராதவை என்று கூறிய அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டக் காணொளியில் கடத்தி வரப்பட்ட வெவ்வேறு வகைப் பாம்புகள் அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய மையமாக சீனா இருந்து வருகிறது. ஆனால், நாட்டின் உயிரியல் பாதுகாப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு சட்டங்கள் அனுமதியின்றி அந்த நாட்டின் பூர்வீகமற்ற உயிரினங்களை நாட்டிற்குள் கொண்டு வரத் தடை விதித்திருக்கிறது.

இதுபோன்று சட்டத்தை மீறி கடத்தலில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று சீன சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT