முகப்பு
உலகம்

இலங்கை அதிபரின் பதவிக் காலம்: குழப்பத்தை நீக்க சட்டத் திருத்தம்

அதிபரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்: அமைச்சரவை ஒப்புதல்

Updated On : 10 ஜூலை, 2024 at 8:10 PM
இலங்கை அதிபா் மாளிகை
பகிர்:

இலங்கை அதிபரின் பதவிக் காலம் குறித்து ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அந்த நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் மற்றும் அதிபரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என 2015-ஆம் ஆண்டின் அரசியல் சாசனப் 19-ஆவது சட்டத் திருத்தம் வரையறுக்கிறது. இருந்தாலும், 83-ஆவது சட்டப் பிரிவில் அந்தப் பதவிக் காலத்தை பொதுவாக்கெடுப்பு நடத்தி 6 ஆண்டுகளாக நீட்டிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிபரின் அதிகபட்ச பதவிக் காலம் குறித்த குழப்பம் நிலவிவருகிறது.

இந்தக் குழப்பத்தை நீக்க வேண்டுமென்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில், குழப்பத்தை நீக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 83-ஆவது பிரிவில் ‘அதிபரின் பதவிக் காலமும், நாடாளுமன்ற ஆயுள் காலமும் 6 ஆண்டுகளுக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக மட்டுமே இருக்கும்’ என்ற உட்பிரிவை இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு புதன்கிழமை அறிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →