முகப்பு
உலகம்

நேபாள நிலச்சரிவில் சிக்கிய பயணிகளை மீட்பதற்கான வாய்ப்பு குறைவு: அதிகாரிகள்

நேபாள நிலச்சரிவில் சிக்கிய பேருந்துகளில் இருந்த பயணிகளை மீட்பதற்கான வாய்ப்பு குறைந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 13 ஜூலை, 2024 at 1:20 PM
நேபாளத்தில் நிலச்சரிவு - -
பகிர்:

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பயணிகளை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் இல்லாமல், அதில் இருந்த 51 பயணிகளை மீட்கும் பணி நேபாளத்தில் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் காத்மாண்டுவிலிலுந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்வான் மாவட்டத்தில் நேரிட்ட இந்த சம்பவத்தில், பயணிகளைத் தேடும் பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்து, பேருந்துக் கண்ணாடி ஒன்றையும், சில ஆடைகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், இதனால், தேடுதல் பணியில், பயணிகள் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதாக அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தில் விழுந்து காணாமல் போன பயணிகளில் ஏழு பேர் இந்தியர்கள் என்பதும், தெரிய வந்துள்ளது. பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தபோது அதிலிருந்து மூன்று பயணிகள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியிருக்கிறார்கள்.

நிலச்சரிவில் சிக்கி, பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து 30 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதால், இனியும் பயணிகள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆற்றில் வெள்ளப்பெருக்குக் குறைந்துவிட்டபோதிலும், படுமோசமான சேறு காணப்படுவதாகவும், இதனால் தேடுதல் பணியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.