உலகம்

அமெரிக்கருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை!

கொலை வழக்கில் 5 ஆண்டுகள் கழித்து தண்டனை

DIN

அமெரிக்காவில் பிரையன் ஸ்டீவன் ஸ்மித் என்பவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், 2019ஆம் ஆண்டில் கேத்லீன் ஹென்றி என்ற பெண் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர், காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். ஆனால், பிரையன் ஸ்டீவன் ஸ்மித் என்பவர் தான் 2019ஆம் ஆண்டில் கேத்லீனை கொன்று, அதை விடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.

கேத்லீனை கொன்ற விடியோ வைத்திருந்த மொபைலை, ஸ்டீவன் காரில் வைத்திருந்தபோது, மொபைலை திருடிய பெண் ஒருவர் அதிலிருந்த விடியோ குறித்து, காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஸ்டீவன் ஸ்மித்தை கைது செய்தனர்.

அதுமட்டுமின்றி, ஸ்டீவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவருடைய மனைவியான வெரோனிகாவையும் கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

ஸ்டீவனின் மனைவியின் கொலை குறித்து அவர் கூறியதாவது, ``வெரோனிகா வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, துர்நாற்றமாக இருந்ததால், அவரைக் குளிக்கச் சொன்னேன்; ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனால், கோபமுற்று அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு பேரை கொலை செய்ததற்காக, தலா 99 ஆண்டுகள் வீதம் 198 ஆண்டுகள் மற்றும் கேத்லீனை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை

ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்கு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

SCROLL FOR NEXT