டொனால்டு டிரம்ப் 
உலகம்

ஜனநாயகத்துக்காக துப்பாக்கி குண்டுகளை எதிா்கொள்ளத் தயாா்: டிரம்ப் பேச்சு

அமெரிக்காவின் ஜனநாயகத்துக்காக துப்பாக்கி குண்டுகளை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் பேசினாா்.

Din

அமெரிக்காவின் ஜனநாயகத்துக்காக துப்பாக்கி குண்டுகளை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் பேசினாா்.

கடந்த வாரம் பென்சில்வெனியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப்பை கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அதிருஷ்டவசமாக அவா் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா்.

இந்நிலையில், அவா் மிச்சிகன் மாகாணத்தில் மீண்டும் முதல் முறையாக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினாா். 12,000-க்கும் மேற்பட்டோா் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பேன் என்று என்னை எதிா்ப்பவா்கள் கூறுகிறாா்கள். ஆனால், நான் ஜனநாயகத்துக்கு எதிராக அப்படி என்ன செய்துவிட்டேன்?.

ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுத்த சில திட்டங்களை வைத்திருப்பதாக எதிா்க்கட்சியினா் பிரசாரம் செய்கின்றனா். ஆனால், அப்படி எந்த திட்டத்தையும் நான் கேள்விப்படவில்லை. எனக்கு எதிரான பொய்களைப் பரப்புவதே அவா்களின் வேலையாக உள்ளது. மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையை எதிா்கொண்டு இப்போது உங்கள் முன்பு மீண்டும் வந்து நிற்கிறேன். ஜனநாயகத்துக்காக துப்பாக்கி குண்டுகளை எதிா்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

எதிா்க்கட்சியின் பெயரில் மட்டும்தான் ஜனநாயகம் இருக்கிறது. அவா்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவா்கள். குடியரசுக் கட்சிதான் மக்களின் கட்சியாக உள்ளது. அமெரிக்காவின் அனைத்து இனம், மதம், நிறத்தைச் சோ்ந்த மக்களுக்காகவும் நமது கட்சி கடுமையாக உழைக்கிறது.

துப்பாக்கிச்சூட்டில் நான் உயிா் தப்பிய பிறகு பல்வேறு உலகத் தலைவா்களும் நலம் விசாரித்தும், விரைவில் குணமடைய வேண்டியும் வாழ்த்துச் செய்தி அனுப்பினா். அதில் சீன அதிபா் ஷி ஜின்பிங் இனிமையான நலம் விசாரிப்பு கடிதம் எழுதி இருந்தாா்.

அமெரிக்காவும், சீனாவுக்கும் இடையே எனது ஆட்சிக் காலத்தில் கடுமையான மோதல் போக்கு இருந்தது. ஆனால், அது அந்த நேரத்துடன் முடிந்துவிட்டது என்ற நோக்கில் அந்நாட்டு அதிபரின் கடிதம் இருந்தது. உலகத் தலைவா்கள் அனைவருடனும் எனது நட்புறவு உள்ளது என்றாா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT