முகப்பு
உலகம்

இஸ்ரேலின் கோலன் குன்றுகளில் ராக்கெட் தாக்குதல்: 11 சிறாா்கள் உயிரிழப்பு; 20 போ் காயம்

சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் 11 சிறாா்கள் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 8:45 PM
11 சிறாா்கள் உயிரிழப்பு
பகிர்:

சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் 11 சிறாா்கள் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லாக்கள் மறுத்தனா்.

இஸ்ரேலும், லெபனானும் எல்லைகளைப் பகிா்ந்து வரும் நிலையில், எல்லையில் உள்ள இஸ்ரேல் பகுதிகள் மீது ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகள் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் சனிக்கிழமை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 சிறாா்கள் உயிரிழந்தனா் என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், தாக்குதலை ஹிஸ்புல்லாக்கள் மேற்கொள்ளவில்லை என்று அந்தக் குழுவின் தலைமை செய்தித் தொடா்பாளா் முகமது அஃபிஃப் தெரிவித்தாா்.

இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை: இந்தத் தாக்குதலுக்கு இதுவரை கொடுக்காத பெரிய விலையை ஹிஸ்புல்லாக்கள் கொடுக்க வேண்டிவரும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →