பிரசாரத்தில் டிரம்ப் பங்கேற்றபோது 
உலகம்

இந்த முறை என்னைத் தேர்ந்தெடுங்கள்! பிறகு எப்போதும் வாக்களிக்க வேண்டியிருக்காது! டிரம்ப் அதிர்ச்சி பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசியது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்

DIN

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் என்ன பேசினார்? என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரையில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் பங்கேற்ற டிரம்ப் கிறிஸ்தவர்களிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், ``நான் கிறிஸ்தவர்களை நேசிக்கிறேன். நான் ஒரு கிறிஸ்துவன். கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்துவிடுவோம், அது உங்களுக்கே தெரியும். ’’ என்று கூறினார்.

பிரசாரத்தில் டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு என்ன அர்த்தம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. டிரம்ப் பேசியது குறித்து விளக்கமளிக்கக் கோரியும் விளக்கமளிக்கப்படவில்லை.

இருப்பினும், டிரம்ப் பேசியது குறித்து, பிரசாரத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்கிடம் கேட்டபோது, ``டிரம்ப் நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார்’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT