பாலஸ்தீனர்கள் அதிகம் வாழும் பழைய ஜெரூசலேம் நகரின் தெருக்களில் இஸ்ரேலிய தேசியவாதிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கும் வருடாந்திர பேரணி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் பெரிதாக பாதிக்கப்படாது அமைதி நிலவி வந்த ஜெரூசலேமில் இந்த பேரணி மோதலை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.
1967 மத்தியகிழக்கு போரில் இஸ்ரேல் ஜெரூசலேமை கைப்பற்றிய நாளை நினைவுகூரும் வகையில் இந்த பேரணி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இஸ்ரேல் ஜெரூசலேம் முழுவதையும் தலைநகராக கருதுகிற போதும் சர்வதேசளவில் ஜெரூசலேமின் கிழக்கு பகுதியை பன்னாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனர்களை பொருத்தவரை கிழக்கு ஜெரூசலேம் எதிர்காலத்தில் அமையவிருக்கும் அவர்களின் பாலஸ்தீன அரசுக்கான தலைநகராக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் பேரணி நடைபெறும் இடங்களில் இருந்து பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக காவலர்கள் அகற்றினர். அதிதீவிர இஸ்ரேலிய தேசியவாத இளைஞர்கள் பாலஸ்தீனத்துக்கு எதிரான கோஷங்களை பேரணியில் எழுப்புவர்.
புராதன மார்க்கத்திலேயே பேரணி நடைபெறும் என தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்க்விர் தெரிவித்துள்ளார். அதன்படி டமாஸ்கஸ் நுழைவாயில் வழியாக முஸ்லீம் குடியிருப்பில் நுழைந்து வெஸ்டர்ன் வாலில் (மேற்கு சுவர்- யூதர்களின் வழிபாட்டு இடம்) பேரணி முடிவடையவுள்ளது.
பேரணி செல்லும் வழியில் இஸ்லாமியர்களின் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அமைதியை நிலைநாட்ட 3000-க்கும் காவலர்கள் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.