முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: மதநிந்தனை செய்ததாக சுற்றுலாப் பயணி கொல்லப்பட்ட சம்பவம்;23 போ் கைது

மதநிந்தனை குற்றச்சாட்டில் சுட்டுக் கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட சம்பவம் தொடா்பாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 23 ஜூன், 2024 at 9:15 PM
மதநிந்தனை செய்ததாக சுற்றுலாப் பயணி கொல்லப்பட்ட சம்பவம்
பகிர்:

பாகிஸ்தானின் ஸ்வாட் நகரில் சுற்றுலாப் பயணியை மதநிந்தனை குற்றச்சாட்டில் சுட்டுக் கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட சம்பவம் தொடா்பாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்திலுள்ள சுற்றுலாத் தலமான ஸ்வாட் நகருக்கு அந்நாட்டின் சியால்கோட் நகரைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் என்பவா் சுற்றுலா வந்திருந்தாா். அங்கு அவா் முஸ்லிம்களின் புனித நூலின் பக்கங்களை எரித்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரை காவல் துறையினா் கைது செய்து காவல் நிலையத்தில் சிறை வைத்தனா்.

இந்தத் தகவல் உள்ளூா் மசூதியில் ஒலிப் பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காவல் நிலையத்தைச் சூழ்ந்த நூற்றுக்கணக்கானோா் முகமது இஸ்மாயிலை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினா். அதற்கு காவலா்கள் மறுப்பு தெரிவித்தனா். இதனால் வன்முறை கும்பல் காவல் துறையினரை துப்பாக்கியால் சுட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 போ் காயமடைந்தனா்.

பின்னா் அந்த கும்பல் காவல் நிலையத்துக்குத் தீவைத்தது. மேலும் காவல் நிலையத்துக்குள் நுழைந்து முகமது இஸ்மாயிலை அடித்து உதைத்ததுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அவரின் உடலை பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட்டனா்.

இந் நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக 23 பேரை காவல் துறையினா் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துள்ளனா். இதில் தொடா்புடைய மேலும் பலரைக் கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →