சக்திவாய்ந்த நிலநடுக்கம் 
உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.2 ஆகப் பதிவு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது.

DIN

தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கதின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பசுபிக் பெருங்கடலில், காரவேலி மாகாணத்தில் அட்டிகிபா மாவட்டத்திற்கு மேற்கே 5 மைல் (8 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. சிலி மற்றும் பொலிவியாவின் எல்லைகளுக்கு அருகில் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 300 மைல் தொலைவில் உள்ளது. இதன் ஆழம் 17 மைல்கள்(20 கி.மீ) ஆகும்.

இந்த நிலநடுக்கமானது அயகுச்சோ, இகா மற்றும் தலைநகரின் அருகிலுள்ள பகுதிகளில் உணரப்பட்டாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் மற்றும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் அமைந்துள்ளதால், பெரு நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT