ரோமானியாவுக்கு புதிய தூதர் நியமனம்!
ரோமானிய தூதராக மணிகா ஜெயின் நியமனம்!
ரோமானியா நாட்டுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி மணிகா ஜெயினை நியமித்துள்ளது, வெளியுறவுத் துறை அமைச்சகம்.
அவர் தற்போது அமைச்சரவையில் கூடுதல் செயலராக பணியாற்றி வருகிறார். தற்போதைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு விரைவில் ரோமானிய தூதராக பொறுப்பேற்கவுள்ளார் மணிகா ஜெயின். இவர் 1993 பேட்ச் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.