ஓப்பன்ஹெய்மர், புவர் திங்ஸ் திரைப்படங்கள் 2024ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்துள்ளன.
96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளிலும், புவர் திங்ஸ் படம் 11 பிரிவுகளிலும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அதேபோல் ‘பார்பி’ படம் 8 பிரிவுகளில் போட்டியிட்டன. விருது நிகழ்ச்சியை 4வது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.
அதில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 7 ஆஸ்கர் விருதகளை வென்று அசத்தியது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், நடிகர், துணை நடிகர், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் இப்படம் விருதுகளை வென்றது.
இதேபோல் “புவர் திங்ஸ்” திரைப்படமும் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. அந்த படம் சிறந்த நடிகை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றன.
அதேசமயம், மார்ட்டின் ஸ்கர்செசி இயக்கிய கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரைப்படம் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் ஒரு விருதுகூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.