கிறிஸ்டோபர் நோலன்.
கிறிஸ்டோபர் நோலன். 
உலகம்

ஆஸ்கர் 2024: சிறந்த படம் ‘ஓப்பன்ஹெய்மர்’

DIN

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ‘பார்பி’ படம் 8 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. விருது நிகழ்ச்சியை 4வது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.

மேலும் இப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தியுள்ளார். அவர் 8 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்ககாக முதல்முறையாக இவ்விருதை வென்றிருக்கிறார்.

சிறந்த நடிகர் விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஒப்பன்ஹெய்மர் படத்தில் நடித்த சிலியன் மர்ஃபி, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

இவை தவிர, ஓப்பன்ஹெய்மர் படம் சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT