மிருணாள் தாகூர் 
உலகம்

ஐநா விவாதத்தில் கலந்து கொள்ளும் பாலிவுட் நடிகை!

உலக அரங்கில் மிருணாள் குரல்: பாலியல் வன்முறை குறித்த ஐநா விவாதத்தில் பங்கேற்பு

DIN

நடிகை மிருணாள் தாகூர், ‘பாலியல் வன்முறை தொடர்பான சிக்கலால் மனிதர்கள் இழக்கக் கூடியவை’ என்கிற தலைப்பிலான ஐக்கிய நாடுகள் அவையின் குழு விவாதத்தில் பங்கேற்கவுள்ளார்.

இவர் ‘சீதா ராமம்’, ‘ஹை நான்னா’, ‘தமாகா’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநாவின் தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மிருணாள், பணி காரணமாக இங்கிருந்தே இணையவழியில் கலந்து கொள்கிறார்.

மிருணாள் நடித்த ‘லவ் சோனியா’ திரைப்படம் மனிதர்கள் கடத்தப்படுவதன் பின்ணணி குறித்த எதார்த்தத்தை வெளிப்படுத்தியது.

இந்த குழு பாலியல் வன்முறைக்கான உலகளாவிய சூழல் மற்றும் தாக்கம் குறித்தும் மனித கடத்தல் விவகாரம் குறித்தும் விவாதிக்கவுள்ளது.

இது குறித்து, “இந்த விவாதத்தில் பங்கேற்பது, பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மற்றும் மாற்றத்திற்கான கூட்டு நடவடிக்கையில் எனது குரலும் பதிவாக ஒரு வாய்ப்பு தருகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்கவும் இது தொடர்பாக பேசவும் இந்த விவாதம் உதவும். இதற்காக மிகவும் நன்றியுடையவளாகவிருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT