முகப்பு
உலகம்

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: சிரிய ராணுவம், ஹிஸ்புல்லா போராளிகள் உள்பட 42 உயிரிழப்பு.

Updated On : 29 மார்ச், 2024 at 11:02 AM
கிழக்கு அலெப்போ
பகிர்:

இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் தாக்குதல் நடத்தியகா சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 42 பேர் பலியாகியிருக்கலாம் என போர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பலர் சிரிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

பிரிட்டனை மையமாக கொண்டுள்ள சிரியாவின் மனிதநேய அமைப்பு, லெபனானை சேர்ந்த ஈரானிய ஆயுதக் குழு ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வான்வழியாக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இதில் 36 சிரிய வீரர்கள், 6 ஹிஸ்புல்லா போராளிகள் பலியானதாகவும் 12-க்கும் அதிகமான மக்கள் காயமுற்றதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல், வடக்கு அண்டை நாடான சிரியாவில் ஈரானிய ஆக்கிரமிப்பை அகற்ற நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால் அவற்றை ஒத்துக்கொள்ளவில்லை.

சிரியாவில் ஹிஸ்புல்லா அமைப்பு அரசு படைகளோடு சேர்ந்து உள்நாட்டு பிரச்னையில் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு தனது ஆயுத செயல்பாடுகளை கொண்டுள்ளது.

காஸா போர் மூண்டதில் இருந்து சிரியாவில் ஹிஸ்புல்லா மற்றும் அரசு படைகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்துவருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →