Fernando Vergara
உலகம்

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக பிற நாடுகளும் தீவிர நிலைபாடு எடுக்க வேண்டும் என பெட்ரோ வலியுறுத்தல்.

DIN

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், காஸாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது என்றும், அனைத்து நாடுகளும் தீவிர நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காஸா மீதான போர் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வரும் பெட்ரோ, கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிகளுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிலிருந்து, இஸ்ரேல் - கொலம்பியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியிருந்தது.

காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34,000-ஐ கடந்துள்ளது.

பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருவதாகவும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனத்தை விடுவிக்கக் கோரி மாணவர்கள் ஈடுபட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை தொடக்கம்

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

ஆலங்குளம் அருகே சோலாா் மின் உற்பத்தி மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பாஜக அரசை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்: இரா. முத்தரசன்

சங்கரன்கோவில் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிைறை

SCROLL FOR NEXT