நகரும் வீட்டுக்கு முன்பாக வெள்ளம் தேங்கியிருக்கும் காட்சி ஏபி
உலகம்

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

ஹூஸ்டனில் பெரும் வெள்ளம்: 600 பேர் காப்பாற்றப்பட்டனர்

DIN

கிழக்கு டெக்சாஸில் வெள்ள அபாயம் நீடித்து வருகிறது. டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் வெள்ளத்தில் சிக்கிய 600-க்கும் அதிகமான பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கனமழை நீடிக்கும் என கணிக்கப்படுவதால் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.

அடுத்த கனமழை (அமெரிக்க நேரப்படி) வாய்ப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹூஸ்டனுக்கு வடகிழக்கில் உள்ள ஸ்பெளன்டோராவில் கடந்த 5 நாள்களாக 53 செமீ மழை பெய்து வருகிறது.

அந்த பகுதியில் 180-க்கும் அதிகமான மக்கள் மற்றும் 122 செல்ல பிராணிகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஹூஸ்டன் மெட்ரோ பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இந்த மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈஸ்ட் போர்க் சான் ஜாஸிண்டோ பகுதியில் மின் கம்பங்கள் வரை வெள்ளநீர் செல்வதாக ஹூஸ்டன் குரோனிக்கிள் தெரிவித்துள்ளது. சான் ஜாஸிண்டோ ஆற்றுப் பகுதியின் கரையோரம் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் பெய்துள்ளதாக சனிக்கிழமை ஹூஸ்டன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT