மியாமி கடலோர காவல் படை சமீபத்தில் அவர்களின் ரோந்து வாகனம் குறித்த விடியோவை பகிர்ந்துள்ளனர். இணையத்தில் இந்த விடியோ வைரலாகக் காரணம் அந்த வாகனம் ரோல்ஸ் ராய்ஸ் கார் என்பதுதான்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி காவல் படைக்கான ஆள்சேர்ப்பு திட்டத்தின் பகுதியாக இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்- ரோந்து பணியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.
சொகுசு கார்களில் அதிகபட்ச விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் காவல் பணிக்கு பயன்படுத்தப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் ஒருவர், ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிப்பதற்காகவே ஏதாவது குட்டி தவறு செய்துவிட்டு கைதாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது மக்களின் வரிப்பணம் என பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள மியாமி காவல் படை, கார் முகமை நிறுவனமான பிராமன் மோட்டார்ஸ் இதற்கான செலவை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.