போராட்டத்தின்போது எரிக்கப்பட்ட காா்கள். 
உலகம்

போராட்ட வன்முறை: பிரான்ஸ் ஆட்சிப் பகுதியில் அவசரநிலை

காலடோனியா பிரதேசத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்ததால் அங்கு அவசரநிலை

Din

தோ்தல் சீா்திருத்தங்களை எதிா்த்து பிரான்ஸின் ஆட்சிப் பகுதியான நியூ காலடோனியா பிரதேசத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்ததால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள தீவுக் கூட்டமான நியூ காலடோனியா பிரான்ஸின் ஆளுகைக்குள்பட்ட பகுதியாகும். சுமாா் 2.7 லட்சம் போ் வசிக்கும் அந்தப் பகுதி நீண்ட காலமாகவே அடக்குமுறைக்குள்ளாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தச் சூழலில், நியூ காலடோனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவா்கள் அந்தப் பிரதேச தோ்தல்களில் வாக்களிக்கலாம் என்ற சட்டத் திருத்தத்தை பாரீஸிலுள்ள நாடாளுமன்றம் கடந்த புதன்கிழமை நிறைவேற்றியது.

இது, பிரான்ஸுக்கு ஆதரவானவா்களின் ஆதிகத்தை மேலோங்கச் செய்யும் தந்திரம் என்று நியூ காலடோனியாவில் ஒரு பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனா். அந்தப் போராட்டம் வன்முறைாக உருவெடுத்தது.

தோ்தல் சீா்திருத்தத்துக்கு ஆதரவானவா்களும் எதிரானவா்களும் கடுமையான மோதலில் ஈடுபட்டனா். மேலும், கலவரம், தீவைப்பு, சூறையாடல் போன்ற சம்பவங்களும் அரங்கேறின. இதனால் அந்தப் பிராந்தியத்தில் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்களில் 4 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, நியூ காலடோனியாவில் பிரான்ஸ் அரசு அவசரநிலையை அறிவித்தது.

அதையடுத்து, அந்தப் பகுதிக்கு கூடுதல் அதிகாரங்களுடன் ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... ஆஷ்னா ஜவேரி!

பால் நிலா... ஹர்லின் தியோல்!

உலக அரங்கில் இந்திய சினிமா... ரன்வீர் சிங் பேச்சு!

தமிழ்நாட்டில் இதுவரை 6.07 கோடி படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

”RSS சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியே SIR-ஐ எதிர்த்து போராடும் Vijay" - Appavu

SCROLL FOR NEXT