உலகம்

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பையில் டெய்லர் ஸ்விஃப்ட் போஸ்டர்: ரசிகர்கள் கேள்வி?

DIN

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் புதிய இசைத் தொகுப்பான ‘தி டார்ச்சர்ட் பொயட்ஸ் டிபார்ட்மெண்ட்’ ஆல்பத்தின் போஸ்டர்கள் மும்பையில் பேருந்துகள் உள்பட பல இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்களிடயே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெய்லர் ஸ்விஃட்டின் ரசிகர்கள் பலர், இந்தியாவில் டெய்லரின் இசை நிகழ்வு நடக்கவுள்ளதா என்கிற வகையில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ‘தங்களுக்கான நேரம்’ வந்துவிட்டதாக அவர்களில் சிலர் கருத்திட்டுள்ளனர்.

டெய்லர் ஸ்விஃப்ட்

மும்பையின் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் அவரது ஆல்பத்துக்கான க்யூஆர் கோட் உள்ளிட்டவை காணப்படுகின்றன. ஆனால் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் இசைப் பயணத்தில் இருக்கும் டெய்லர், சமீபத்தில் வெளியாகி பெரும்வரவேற்பைப் பெற்ற ‘தி டார்ச்சர்ட் பொயட்ஸ் டிபார்ட்மெண்ட்’டின் பாடல்களை தனது நிகழ்வில் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

SCROLL FOR NEXT