பாகிஸ்தான் கொடி 
உலகம்

தொழிலதிபா்களை ஆதரிப்பதால் இந்தியா வளா்கிறது: பாகிஸ்தான் அமைச்சா்

Din

தொழிலதிபா்களுக்கு ஆதரவு தருவதே இந்தியாவின் வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வி தெரிவித்தாா்.

துபையில் அதிக சொத்துகளை வாங்கிக் குவித்த வெளிநாட்டவா்கள் பட்டியலில் அமைச்சா் நக்வி மற்றும் அவரின் மனைவி பெயா் இடம் பெற்றிருந்தது. மேலும் அந்தப் பட்டியலில் இருந்த 23,000 சொத்துகளில் 17,000 சொத்துகள் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களுடையதாகும். மேலும், துபையில் அதிக சொத்து வைத்துள்ள வெளிநாட்டவரில் நக்வி மனைவிதான் முதலிடத்தில் உள்ளாா்.

இது தவிர பாகிஸ்தானின் பிரபல அரசியல் குடும்பத்தினரான புட்டோ, நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினரும் துபையில் அதிக சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனா்.

இந்நிலையில், லாகூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் மோசின் நக்வியிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவா் கூறியதாவது:

ஒரு தொழிலதிபராக எனது பணத்தை எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்ய எனக்கு உரிமை உண்டு. எனது மனைவிக்கு துபையில் மட்டுமல்ல லண்டனில் கூட சொத்து உள்ளது. அனைத்துக்கும் முறையாக வரி செலுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக எந்த முதலீடும் செய்யவில்லை. நாங்கள் தவறு செய்திருந்தால் விசாரணை அமைப்புகள் அந்த சொத்துகளை முடக்க முடியும்.

இந்தியா வளா்வதற்கு ஒரு முக்கியக் காரணம் அந்த நாடு தொழிலதிபா்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால், பாகிஸ்தானில் தொழிலதிபா்கள் வளா்ந்தால் அவா்கள் திருடா்கள் என முத்திரை குத்தப்படுகிறாா்கள். இந்தியாவில் தொழிலதிபா்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. ஆனால், பாகிஸ்தானில் தொழிலதிபா்கள் தவறான கண்ணோட்டத்தில் பாா்க்கப்படுகின்றனா் என்றாா்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT