ரஷியாவின் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஆராயும் உக்ரைன் ராணுவவீரர் (கோப்புப் படம்) ஏபி
உலகம்

கார்கிவில் ரஷிய தாக்குதல்: முதியவர் உள்பட 7 பேர் காயம்!

கார்கிவில் ரஷிய தாக்குதல்: 7 பேர் காயம், முதியவர்கள் உட்பட!

DIN

உக்ரைன் கார்கிவ் நகரின் மீது ரஷியா நள்ளிரவில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 7 பேர் காயமுற்றுள்ளதாக பிராந்தியத்தின் ஆளுநர் ஓலே சின்யெஹுபோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் வான்வழி பாதுகாப்பு தடுப்பு பிரிவால் ரஷியாவின் டிரோன்கள் தாக்கப்பட்டதில் அவற்றின் பாகங்கள் வெடித்து நகரில் அல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மற்றும் கட்டடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

61 வயது முதியவர், 69 மற்றும் 72 வயதுள்ள முதிய பெண்கள் இந்த தாக்குதலில் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

ரஷியாவின் டிரோன்களால் உக்ரைனில் ஒடேசா,மைகோலைவ், டினிப்ரோபெட்ரோவெஸ்க் ஆகிய நகரங்களும் நள்ளிரவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

29 டிரோன்களில் 28-ஐ உக்ரைன் வானில் தகர்த்ததாக அந்நாட்டின் வான்பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ரஷியா உக்ரைனின் எல்லைப் பகுதியான கார்கிவ் பிராந்தியத்தில் கடந்த 2 வாரங்களாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல உக்ரைனிய கிராமங்களையும் கைப்பற்றியுள்ளது.

தாக்குதல் சில நாள்களாக குறைவுற்றாலும் நிற்கவில்லை என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT