பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிக்கும் முடிவை அறிவிக்கும் நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் (வலது) ஏபி
உலகம்

அயர்லாந்து, நார்வே தூதர்களை திரும்ப பெறும் இஸ்ரேல்! ஏன்?

பாலஸ்தீன அங்கீகாரத்தை எதிர்த்து அயர்லாந்து, நார்வே தூதர்களை திரும்ப பெறும் இஸ்ரேல்

DIN

அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய இருநாடுகளில் இருந்து தனது தூதர்களை திரும்ப பெறுவதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்துள்ளது.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் இந்த நாடுகளின் முடிவை எதிர்த்து இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தங்கள் தூதர்களை உடனடியாக நாட்டுக்கு திரும்ப அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது,

”இஸ்ரேலின் இறையாண்மை மற்றும் அதன் பாதுகாப்பு குலைக்கப்படுவதை அங்கீகரிக்கும் யாரையும் இஸ்ரேல் பொருத்துக்கொள்ளாது.

”யூதர்கள் மீது நாஜி படுகொலைக்கு பிறகான கொடூரமான செயலை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய பிறகு, உலகம் இதுவரை கண்டிராத பாலியல் வன்கொடுமைகளை செய்த பிறகு. இந்த நாடுகள் ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு வெகுமதியளிக்கும் வகையில் பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிக்கின்றன. இது அக்.7 பலியானவர்களை அவமதிக்கும் செயல். பிணைக்கைதிகளை விடுவிக்க நடக்கும் முயற்சிகளை குலைக்கிற செயல்

”பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவில் ஸ்பெயினும் தொடருமானால் இஸ்ரேல் இதே நடைமுறையை பின்பற்றும் என காட்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிப்பதாக புதன்கிழமை அறிவித்தன.

அங்கீகாரம் இல்லையெனில் அங்கு அமைதி தொடராது என முதலில் அறிவிப்பை விடுத்த நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள அலுவலா்களுடன் டிஜிபி ஆலோசனை

SCROLL FOR NEXT