அதிபரின் உடல் கொண்டுசெல்லப்படும் வாகனத்தை சுற்றி மக்கள் திரள் ஏபி
உலகம்

ஈரான் அதிபர் இறுதி ஊர்வலம்: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

ஈரான் அதிபர் இறுதி ஊர்வலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

DIN

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் இறுதி ஊர்வலம் புதன்கிழமை தெஹ்ரானில் நடைபெற்றது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் வாகனத்தை மக்கள் திரள் சூழ்ந்தது. இவர்களின் இறுதி அஞ்சலி ஈரானின் மேல்மட்ட தலைவரான அயதுல்லா அலி கமேனி முன்பாக நடத்தப்பட்டது.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுதலை சதுக்கம் வரை ஊர்வலம் சென்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு ஈரானில் ரய்சி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 8 பலியான விபத்துக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாட்டில் 5 நாள்கள் துக்கம் கடைபிடிக்க கமேனி உத்தரவிட்டார்.

புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள், ராணுவ தளபதிகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

அதிபரின் உடல் அவரது சொந்த ஊரான மசாத்தில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஈரான் அரசு ரயில்வே, அதிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்காக தெஹ்ரான் முதல் மசாத் வரை சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்த லாரிகள் சிறைபிடிப்பு

கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை

முதல்வா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

அஞ்சலகத்தில் கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதி

SCROLL FOR NEXT